Sunday, 10 March 2013

வர வேண்டாம் இங்கு


*****.......வர வேண்டாம் இங்கு ......***** 

கண்ணீர்
காவியம் - எழுதின
கண்கள்
விடுதியின்
விதியில்

வினாடிகள் கூட
நனைந்தன
விழி வரைந்த
விதியால்

புதிய மொட்டொன்று
சிலிர்த்தெழுந்த
மறு கணமே
ஈசலாகிப்போன
மாயம் - தான்
என் வாழ்வு

குடம்பியாய்
வாழ்ந்த
காலமெல்லாம்
பறக்கவென ஆசைப்பட்டேன்
கண்களை மூடிக்கொண்டு

சிறகு முளைத்து
விரித்தவுடன்
சிக்கிக் கொண்டது - விழி திறந்த போது
நிஜம் தெளிந்தது
சிறைக்குள் அடைக்கப்பட்டதாய்

அடுத்துள்ள சந்ததிக்கோர்
அன்பான வேண்டு கோள்
வர வேண்டாம் இங்கு ........................

0 comments:

Post a Comment